அரசு பெண்கள் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
நாகை அரசு பெண்கள் பள்ளியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்; முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
நாகப்பட்டினம்
நாகூர்:
நாகப்பட்டினம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் குடிநீர் வசதி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். அவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை செய்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி சார்பில் நாகை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். இதில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, நகராட்சி செயற்பொறியாளர், பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story