கட்டங்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு ைமயம்


கட்டங்குடியில் குடிநீர் சுத்திகரிப்பு ைமயம்
x

கட்டங்குடி நீர் உந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


கட்டங்குடி நீர் உந்து நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

பொதுமக்கள் புகார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அருப்புக்கோட்டை நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நீர் ஆதாரமாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் திருப்புவனம் வைகை குடிநீர் திட்டம் நடைமுறையில் உள்ளது. தற்பொழுது வைகை குடிநீர் திட்டத்தில் கிடைக்கப்பெறும் குடிநீரின் நிறம் மங்கலாகவும் மற்றும் சுவையற்றதாகவும் உள்ளதாக தொடர்ந்து பொது மக்களிடமிருந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து வைகை குடிநீர் திட்டம் செயல்படும் திருப்புவனம் தலைமை நீரேற்று நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்யப்பட்டது. வைகை நீரானது நீரோட்டம் இல்லாமல் இந்தநகராட்சி தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையில் தேங்கிய நிலையில் நீராக இருந்தது. அதனால் தற்காலிகமாக வைகை குடிநீரானது பொது மக்கள் வினியோகத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் வினிேயாகம்

திருப்புவனம் வைகை குடிநீர் திட்டம் போக எஞ்சிய மீதமுள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கிடைக்கப்பெறும் குடிநீரினை கொண்டு இந்நகராட்சிக்குட்பட்ட 36 வார்டு பொது மக்களுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய உள்ளதால், பொது மக்கள் குடிநீரின் அவசியத்தை கருத்தில் கொண்டு வினியோகம் செய்யப்படும் தண்ணீரினை, குடிநீர் உபயோகத்திற்கு மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

திருப்புவனம் வைகையில் தொடர் நீரோட்டம் சீராகும் பட்சத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் தங்கு தடையின்றி வழங்கப்படும்.

விரைவில் முடிக்கப்படும்

மேலும் திருப்புவனம் வைகை குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கட்டங்குடி நீர் உந்து நிலையத்தில் குடிநீரினை சுத்திகரிப்பதற்காக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கட்டங்குடி நீரேற்று நிலையத்திலிருந்து அருப்புக்கோட்டை நகருக்கு (மதுரை ரோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை) 7.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு 375 எம்.எம்.சி.ஐ. பகிர்மான குழாயினை 300 எம்.எம்.டி.ஜ. பைப்புகளாக மாற்றுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. மேற்படி 2 பணிகளும் விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story