மொடக்குறிச்சி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்; பொதுமக்கள் அவதி
மொடக்குறிச்சி அருகே குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்; பொதுமக்கள் அவதி
ஈரோடு
மொடக்குறிச்சி
மொடக்குறிச்சி அருகே உள்ள மண்கரடு பகுதியில் இருந்து குலவிளக்கு செல்லும் சாலையில் வண்ணாம்பாறை முருகன் கோவில் வளைவில் தார்ரோட்டில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீரின் அழுத்தத்தால் சுமார் 2 அடி ஆழத்துக்கு ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை வாகன ஓட்டிகள் கவனிக்காமல் பள்ளத்தில் விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story