சாலையில் வீணாக சென்ற குடிநீர்


சாலையில் வீணாக சென்ற குடிநீர்
x

குழாய் உடைந்து சாலையில் குடிநீர் வீணாக சென்றது.

தஞ்சாவூர்

தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே கிரிபிரிவு சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் மூலம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் குடிநீர் வினியோகம் பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் வெளியேறி பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சாலையிலும் தேங்கி நின்றது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் குழாயை சீரமைக்கவும், இனிவரும் காலங்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Next Story