குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்


குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
x

மருதூர் கடைத்தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

மருதூர் கடைத்தெருவில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடிநீர் குழாய் உடைந்தது

வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரியில் இருந்து அண்ணா பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம் வழியாக வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மருதூர் கடைத்தெருவில் செல்லக்கோன் வாய்க்காலின் மேல்பகுதியில் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டபிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆற்றில் கலந்து வீணாகிறது

கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வேதாரண்யம் செல்லும் பிரதான சாலையில் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்த உடைப்பு சரி செய்யப்பட்டது.

இதனையடுத்து அந்த பகுதியின் எதிர்புறத்தில் தற்போது குழாய் உடைந்து ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வெளியேறி வீணாக ஆற்றில் செல்கிறது. தற்போது கோடை காலமாக உள்ளதால் அனைத்து ஊராட்சியிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கை

இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து மருதூர் கடைத்தெருவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story