பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த டிரைவர் கைது
பெண் குளிப்பதை செல்போனில் படம்பிடித்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
டிரைவர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கந்துவளியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 39), டிரைவர். சம்பவத்தன்று இவர், கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்துக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வரும் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்தபோது துரைப்பாண்டி தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த அந்த பெண் துரைப்பாண்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை செய்துவிடுவதாக கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
கைது
இந்த சம்பவம் பற்றி அந்த பெண் தனது மகனிடம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவரது மகன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.பெண் குளிப்பதை செல்போனில் படம்பிடித்த டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.