நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில்இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர் கைது


நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில்இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டாா்.

கடலூர்


நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 32). டிப்பர் லாரி டிரைவர். இவர் சம்பவத்தன்று நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு கழிவுகளை ஏற்றுவதற்கு சென்றார். பின்னர் திரும்பி வரும் போது, ஆலையில் பணியாற்றி வந்த காவலாளிகள், அந்த லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் அவர் இரும்பு பொருட்களை திருடி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சாந்தமூர்த்தியை அவர்கள் நெல்லிக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சாந்தமூர்த்தியை கைது செய்தனர்.


Next Story