தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம், எசனை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகனான சிவா (வயது 23) டிரைவர் வேலை பார்த்து வந்தார். மேலும் மது குடிக்கும் பழக்கம் உடையவரான சிவாவுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சிவா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ளவர்களிடம் வயிறு வலிக்கிறது என்று கூறி மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு தூங்க சென்றார். நேற்று அதிகாலை தந்தை சின்னசாமி எழுந்து பார்த்த போது வீட்டின் சமையலறையில் சிவா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.