தனியார் விடுதியில் டிரைவர் மர்ம சாவு
கன்னியாகுமரியில் தனியார் விடுதியில் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 54). திருமணமாகாத இவர் ஒரு கூரியர் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலையில் விடுதியில் இருந்து நீண்ட நேரமாகியும் சின்னதுரை வெளிே்ய வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சின்னதுரை எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.