கார் மோதி டிரைவர் பலி
கார் மோதி டிரைவர் பலியானார்
மதுரை
கொட்டாம்பட்டி
கொட்டாம்பட்டி அருகே உள்ள சீயந்தான்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி(வயது 50). வேன் டிரைவர். இவர் நேற்று காலை அய்யாபட்டி விலக்கு அருகே நான்கு வழிச்சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ராஜீவ்காந்தி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே அந்த கார் நிற்காமல் சென்றது. அந்த காைர மேலூர் போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான கோவில்பட்டியை சேர்ந்த சீனிவாசனை(40) கைது செய்தனர்.
Related Tags :
Next Story