சாலையோர தடுப்புக்கட்டையில் லாரி மோதல் டிரைவர் பலி


சாலையோர தடுப்புக்கட்டையில் லாரி மோதல் டிரைவர் பலி
x
தினத்தந்தி 23 Sep 2022 6:45 PM GMT (Updated: 2022-09-24T00:16:12+05:30)

மயிலம் அருகே சாலையோர தடுப்புக்கட்டையில் லாரி மோதல் டிரைவர் பலி

விழுப்புரம்

மயிலம்

சென்னையில் இருந்து விழுப்புரம் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாகப்பட்டினம் மாவட்டம் திருகுவாலை பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் குமரேசன்(வயது 26) என்பவர் லாரியை ஓட்டினார். மயிலம் அருகே உள்ள விளங்கம்பாடி அய்யனாரப்பன் கோவில் எதிரே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story