மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் சாவு
x

தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் டிரைவர் பலியானார்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

ஏரல் அருகே உள்ள பண்ணைவிளை புதூர் பகுதியை சேர்ந்த ஞானமுத்து மகன் வையணபெருமாள் (வயது42). தனியார் டிராவல்ஸ் டிரைவராக உள்ளார். இவர் வேலைக்கு செல்வதற்காக தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் முள்ளக்காடு அருகே உள்ள பொட்டல்காடு விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியது.

இதில் படுகாயமடைந்த வையணபெருமாள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்துகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story