மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் சாவு
x

வெறையூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவண்ணாமலை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 65), டிரைவர். இவர், திருவண்ணாமலை பகுதியில் இருந்து கடலூர் நோக்கி மினி லாரியில் சென்று கொண்டிருந்தார். உடையானந்தல் அருகே சாப்பிடுவதற்காக மினி லாரியை நிறுத்திவிட்டு நடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குப்புசாமி மீது மோதியது.

அதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வெறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story