லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி


லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலி
x

ஆம்பூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

திருப்பத்தூர்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 42), லாரி டிரைவர். இவர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் இருந்து லாரியில் கம்பிகளை ஏற்றிக்கொண்டு சென்னை கும்மிடிபூண்டிக்கு சென்று கொண்டிருந்தார். ஆம்பூரை அடுத்த மாதனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது மேட்டூரில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியின் பின்னால் சிவகுமார் ஓட்டி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் சிவகுமார் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரானைட் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து கிரேன் வரவழைக்கப்பட்டு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story