டிரைவர் தற்கொலை
அருப்புக்கோட்டையில் விஷம் குடித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
அருப்புக்கோட்டை,
கமுதி அருகே கூளிப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் கிருஷ்ணா (வயது 43). கார் டிரைவர். இவரது மனைவி கார்த்திகா. இவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் இதனை நினைத்து சுரேஷ் கிருஷ்ணா மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. அருப்புக்கோட்டை அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டியில் தனது அண்ணன் சசிகுமார் வீட்டிற்கு வந்த இவர் அவரது வீட்டின் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுரேஷ் கிருஷ்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது அண்ணன் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story