ஆன்லைனில் பரிசு பொருள் விழுந்ததாக வாலிபரிடம் மோசடிசெய்யப்பட்ட ரூ.3 லட்சம்மீட்பு


தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆன்லைனில் பரிசு பொருள் விழுந்ததாக வாலிபரிடம் மோசடிசெய்யப்பட்ட ரூ.3 லட்சத்தை போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆன்லைனில் பரிசு பொருள் விழுந்து இருப்பதாக கூறி வாலிபரிடம் மோசடி செய்யப்பட்ட ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் மீட்டனர்.

மோசடி

தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகைரச் சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவருடைய மகன் ஜோன்ஸ். இவருடைய வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாகவும், லிங்கை திறந்த, ஜோன்ஸ், தன்னுடைய இன்டெர்நெட் பேங்கிங் தகவல்களையும், ஓ.டிபி.யையும் பதிவு செய்து உள்ளார். உடனடியாக வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 500 பணம் மோசடியாக எடுக்கப்பட்டு உள்ளது.

இதே போன்று தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொருவருக்கு அமேசானில் பரிசு பொருள் விழுந்துள்ளதாக அடையாளம் தெரியாத நபர் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார். அந்த பரிசை பெறுவதற்கு ரூ.25 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும் என்று கூறி, கிரிடிட் கார்டு மூலம் பணம் செலுத்த ஒரு லிங்கை அனுப்பி உள்ளார். அந்த லிங்கை திறந்தவர், தனது கிரிடிட் கார்டு எண்ணையும், ஓ.டி.பி.யையும் பதிவு செய்து உள்ளார். சிறிது நேரத்தில் அவரது கிரிடிட் கார்டில் இருந்து ரூ.4 லட்சத்து 38 ஆயிரத்து 238 பணம் மோசடியாக எடுக்கப்பட்டது. இது குறித்து ஜோன்ஸ் உள்ளிட்ட 2 பேரும் சைபர் குற்றப்பிரிவுக்கு தனித்தனியாக ஆன்லைனில் புகார் செய்தனர்.

மீட்பு

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு லயோலா இக்னேசியஸ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து பணம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்களில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அந்த நிறுவனங்களை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பொருட்களின் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்தை போலீசார் மீட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கினர்.

இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறும் போது, பொதுமக்கள் தங்கள் செல்போனுக்கு வரும் இது போன்ற எஸ்.எம்.எஸ்.கள், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முகம் தெரியாத நபர் அனுப்பும் லிங்கை பொதுமக்கள் திறக்க வேண்டாம். வங்கி அலுவலர் போல் பேசி யார் ஓ.டி.பி. கேட்டலும் அதனை பகிர வேண்டாம். சைபர் குற்ற மோசடியாளர்களிடம் இருந்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.


Next Story