குடிநீர் திட்டத்தில் வறட்சி:ஆறுமுகநேரியில் ஆழ்துளை கிணற்றுநீர் வினியோகிக்க முடிவு


குடிநீர் திட்டத்தில் வறட்சி:ஆறுமுகநேரியில் ஆழ்துளை கிணற்றுநீர் வினியோகிக்க முடிவு
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் திட்டத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ஆறுமுகநேரியில் ஆழ்துளை கிணற்றுநீர் வினியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

குடிநீர் திட்டத்தில் வறட்சி ஏற்பட்டு இருப்பதால், ஆறுமுகநேரி பகுதியில் ஆழ்துளை கிணற்று நீரை லாரி மூலம் வழங்க பேரூராட்சி அவசர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் தட்டுப்பாடு

ஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளுக்கு மேலாத்தூர் குடிநீர் நீரேற்று நிலையத்தில் இருந்து தாமிரபரணி ஆற்று நீர் வழங்கும் திட்டம் ெசயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நீரேற்று நிலைய பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளதால், கடந்த 3 நாட்களாக ஆறுமுகநேரி,ஆத்தூர், காயல்பட்டினம் பகுதியில் தாமிரபரணி குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகநேரி சிறப்பு நிலை பேரூராட்சியில் அவசரக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர பஞ்சாயத்து தலைவி கலாவதி கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஆழ்துளை கிணற்று நீர்

தற்போது பாபநாசம் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தண்ணீர் தாமிரபரணி கடைசி பகுதியான ஆத்தூர் வரை வந்து சேர்வதற்கு சில நாட்கள் ஆகும். எனவே, பொதுமக்களின் நலன் கருதி நகர பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 16 வார்டுகளில் முதல் நாள் 8 வார்டுகளுக்கும், அடுத்த நாள் 8 வார்டுகளுக்கும் ஆழ்துளை கிணற்று நீர் (போர் வாட்டர்) லாரி மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளுக்கு டோக்கன் வழங்கி அதன் மூலம் தினமும் ஒரு வீட்டிற்கு 4 குடம் தண்ணீர் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story