ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


ஏரியில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 24 Sept 2022 12:15 AM IST (Updated: 24 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை தாலுகா எக்கூர் அருகே உள்ள பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் குமார் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அவர் பூசாரிகவுண்டன் ஏரி பக்கமாக சென்றபோது ஏரியில் தவறி விழுந்தார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story