போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
பழங்குடியின மக்களுக்கு போதைப்பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி
கோத்தகிரி,
கோத்தகிரி காவல்துறை மற்றும் வனத்துறை சார்பில், பழங்குடியின கிராமங்களான கூட்டாடா, வாகப்பனை, கிளிப்பி, கெங்கரை பகுதிகளில் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவ கிருஷ்ணன் மற்றும் வனத்துறையினர் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள், உடல் நலம் கெடுதல், மாணவ-மாணவிகள் கல்வியில் பின் தங்குவது, நினைவுத் திறன் பாதிப்பு, குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது உள்ளிட்ட தீமைகள் ஏற்படுகின்றன. எனவே, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று விளக்கிக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பழங்குடியின மக்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story