போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி


போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி
x

அம்மையப்பன் அரசு பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி:

உலக போதை பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி டெல்லி தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சமூக பணித்துறை, தமிழ்நாடு புகையிலை தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அமைப்பு இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் செயல்திறன் கட்டுமான பயிற்சி ஆகியவை நடந்தது.அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருளாளன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் கலந்துகொண்டு போதைப்பொருட்களை தடுப்பது குறித்து பேசினார். மத்திய பல்கலைக்கழக பதிவாளர் சுலோச்சனா சேகர், துணை பதிவாளர் சுதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரிதா சாந்தகுமார் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மருத்துவ அலுவலர் விஷ்ணுபிரியா ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். நிகழ்ச்சியை பல்கலைக்கழக துறைத்தலைவர் சிகாமணி பன்னீர், உதவி பேராசிரியர் சித்ரா, மற்றும் இன்டர்ன்ஷிப் பயிற்சியாளர் சரண்யாசுந்தர்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


Next Story