விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்


விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில்போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைெபற்றது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜவேல் தலைமை தாங்கினார். இயற்பியல் துறை உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். வணிகவியல்துறை உதவி பேராசிரியர் பரமசிவம் வரவேற்றார். விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ், சப்- இன்ஸ்பெக்டர் மாயகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, போதைப்பொருட்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஹெலன் ரூத் ஜாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் போதைப்பொருளுக்கு எதிராக மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை உதவி பேராசிரியர் தமிழ்வேல் நன்றி கூறினார்.


Next Story