போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசார முகாம்
அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசார முகாம் நடைபெற்றது.
வேலூர்
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு பிரசார முகாம் நேற்று நடந்தது. மருத்துவக் கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், மனநல டாக்டர் வீரமுத்து, கண் டாக்டர் விஜய்சோப்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நல டாக்டர் தேன்மொழி வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைத் தொடர்ந்து போதை பொருள் தடுப்பு குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story