போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்


போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தஞ்சாவூர்
தஞ்சை ரெயிலடியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று அறிஞர் அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது, போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப்பொருட்களை பயன்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தியும் பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.

ஊர்வலத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி ஆணையர் (கலால்) பழனிவேல், தாசில்தார் வெங்கடேசன், மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், டாக்டர்கள் சிங்காரவேலு, பாரதி, போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Next Story