பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி


பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
x

பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

நெமிலியை அடுத்த கீழ்வீதி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவிகளுக்கு, நெமிலி போலீஸ் நிலையம் சார்பில் போதைபொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர்கள் சிரஞ்சிவிலு, சாமிவேல் மற்றும் குமார் ஆகியோர் போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் மது, குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் உடல் நல கோளாறுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது. மேலும் மாணவர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் தடுக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story