போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசுரங்கள்
காட்பாடியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
வேலூர்
சர்வதேச போதைப் பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு நாள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ தலைமை தாங்கினார். சப்- இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் பாலன் ஆகியோர் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல் தடுப்பு நாள் அனுசரிக்க படுவதால் பொதுமக்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கினர். அதனால் ஏற்படும் பொருளாதார நஷ்டம் குறித்த விளக்க பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Related Tags :
Next Story