போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x

திசையன்விளையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு திசையன்விளையில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு யோகேஷ்குமார் தலைமை தாங்கினார். திசையன்விளை தாசில்தார் செல்வகுமார், வியாபாரிகள் சங்க பேரமைப்பு தலைவர் சாந்தகுமார், பேரமைப்பு பகுதி பொறுப்பாளர் சண்முகவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வரவேற்றார். திசையன்விளை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. ஊர்வலத்தில் ரெக்ட் பாலிடெக்னிக் மாணவர்கள், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.




Next Story