போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
கும்பகோணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்
கும்பகோணம்:
கும்பகோணத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கும்பகோணம் ஐந்து தலைப்பு வாய்க்கால் பகுதியில் இருந்து மாரத்தான் போட்டியை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய படி ஓடினர். இந்த மாரத்தான் போட்டி சீனிவாசநல்லூர் பகுதியில் உள்ள உத்தமர் காந்தி பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது.
Related Tags :
Next Story