போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்


போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
x

குத்தாலத்தில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் மயிலாடுதுறை-கும்பகோணம் பிரதான சாலையில் சுமார் 7 கிலோமீட்டர் தூரம் நடந்தது. இதற்கு, கல்லூரி முதல்வர் விஜயேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் குணசேகரன் சுடர் தீபத்தை ஏற்றி வைத்தார். இதில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மங்களநாதன் கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக உடற்கல்வி இயக்குனர்கள் ரவீந்திரபாரதி, பானுப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். சேத்திரபாலபுரம் கடைவீதியில் தொடங்கிய மாரத்தான் ஓட்டம் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு போதை பொருள் விழிப்புணர்வு குறித்து கோஷங்களை எழுப்பியபடியே ஓடினர். முடிவில் மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் வீரமணி, இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.






Next Story