போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி


போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
x

தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் உலக போதை பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணிக்கு பள்ளி தாளாளரும், முதல்வருமான ஜெயா சண்முகம் தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது, போதை பொருட்களால் வீடுகளில் அமைதி குலைந்து மகிழ்ச்சி குறையும். பொருளாதார சீர்கேடு நடக்கிறது. உடல்நலம் பாதிக்கப்படுகிறது. ஆகையால் போதை பொருளை பயன்படுத்தாத புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.

அதன்பிறகு மாணவர்கள் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். போதை பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர். பேரணியில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வர் ரூபிரத்னபாக்கியம் செய்து இருந்தார்.


Next Story