போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x

ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல் துறை சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை ஆசிரியர் பாபு தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், ''மாணவ மாணவிகள் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்தினால் படிப்பில் நாட்டம் குறையும். இதன் மூலம் சுயநினைவு மறைந்து விட்டதோ?என்ற நிலை ஏற்படும். போதை பொருட்களாக புகையிலை, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்து வரும் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இதனை தொடர்ந்து ஒண்ணுபுரம் அரசு மேநிலைப்பள்ளி அருகே உள்ள கடைகளில் போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா உள்பட போலீசார் சோதனை நடத்தினர்.

---

Image1 File Name : 11585951.jpg

---

Image2 File Name : 11585952.jpg

----

Reporter : K.M. SANTHASEELAN Location : Vellore - KANNAMANGALAM


Next Story