போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
x

கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் பயன்பாடு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் தலைமைஆசிரியர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

பட்டதாரி ஆசிரியர் முருகன் வரவேற்றார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி கலந்துகொண்டு போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் குறித்தும், உடல் நலத்திற்கு கேடானது என்றும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் கல்வியை கற்பதில் கவனம் செலுத்தி, உயர்கல்வி கற்பதற்கு தகுதியினை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உதவி தலைமைஆசிரியை முத்துமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முடிவில் உதவி தலைமைஆசிரியர் கேசவன் நன்றி கூறினார்.


Next Story