போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தேனி
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கவுசல்யா தலைமை தாங்கினார். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், போதைப் பொருட்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் பேசினர். நிகழ்ச்சியின்போது, போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து நடந்த ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story