போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி


போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
x

தென்காசியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தென்காசி

தென்காசி:

மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்காசி இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நேற்று எடுக்கப்பட்டது. தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி., நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழிப்புணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி ரெயில்வே மேம்பாலம், கூலக்கடை பஜார் மற்றும் முக்கிய சாலைகளின் வழியாக சென்று மீண்டும் புறப்பட்ட இடத்தை அடைந்தது. இந்தப் பேரணியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story