மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை


மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை
x

மருந்து விற்பனை பிரதிநிதி தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு

ஈரோடு பெரியசேமூர் ஈ.பி.பி.நகர் பி.பி.கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). மருந்து விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி உமாதேவி. இவர்களுக்கு பிரனவ், துருவன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விஜயகுமார் செலவுக்காக கடன் வாங்கி இருந்ததால், அவருக்கும், உமாதேவிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் விஜயகுமார் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story