போதைப்பொருள் விற்ற கடைக்கு 'சீல்'
போதைப்பொருள் விற்ற கடைக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பந்தலூர்,
தமிழகத்தில் குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, பந்தலூர் தாலுகா பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று பந்தலூர் தாசில்தார் நடேசன் உத்தரவின்படி, பந்தலூர் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதியில் வட்ட வழங்கல் அலுவலர் பொதிகைநாதன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர்கள் அசோக்குமார், யுவராஜ் ஆகியோர் கடைகளில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது ஒரு மளிகை கடையில் போதைப்பொருள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடையில் இருந்து 32 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடையை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் போதைப்பொருள் விற்றது குறித்து கடை உரிமையாளர் கோபால்ராஜ் (வயது 67) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.