ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு கொள்முதல்
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.120-க்கு கொள்முதல்
திருப்பூர்
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அதன்படி நேற்று 20 விவசாயிகள் 200 கிலோ முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.100 முதல் ரூ.105 வரைக்கும், மரம் முருங்கை ரூ.105 முதல் ரூ.110 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.120 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.
------------
Related Tags :
Next Story