பொங்கலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுகள் காய் பிடிக்காததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பொங்கலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுகள் காய் பிடிக்காததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
x

பொங்கலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுகள் காய் பிடிக்காததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூர்

பொங்கலூர்

பொங்கலூர் வட்டாரத்தில் தோட்டக்கலை துறை மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுகள் காய் பிடிக்காததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

காய் பிடிக்கவில்லை

பொங்கலூர் வட்டார பகுதியில் தென்னை மற்றும் காய்கறி சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது விவசாயிகள் முருங்கை சாகுபடியிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பொங்கலூர் தோட்டக்கலைத்துறை மூலம் பொங்கலூர் வட்டாரத்தில் உள்ள சுமார் 50 விவசாயிகளுக்கு தலா ஒரு எக்டர் வீதம் சாகுபடி செய்ய முருங்கை நாற்றுகள் வழங்கப்பட்டது. இந்த முருங்கை நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்து அறுவடைக்காக காத்திருந்தனர். ஆனால் 6 மாதங்கள் கடந்தும் காய் பிடிக்கவில்லை. பின்னர் 9 மாதங்கள் கடந்தும் காய் பிடிக்கவில்லை.

ஒரு வருடம் காத்திருந்தும் காய் பிடிக்கவில்லை. அதனால் விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. லட்சக்கணக்கில் செலவு செய்து அரசின் மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுக்களை வாங்கி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பொங்கலூரில் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்றனர். அங்கு பொங்கலூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி அலுவலர் ஷர்மிளாவிடம் இதுகுறித்து கேட்டனர். அவர் அரசின் மூலம் வழங்கப்பட்ட நாற்றுக்களை தான் நாங்கள் வழங்கியுள்ளோம். இதில் நாங்கள் என்ன செய்வது? என்று திருப்பி கேள்வி கேட்டார். இதனால் விவசாயிகள், எங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம்

இதற்கு நஷ்ட ஈடு யார் வழங்குவது? என்று எதிர் கேள்வி கேட்டனர். இதனால் அங்கு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை அதிகாரி ஷர்மிளா விவசாயிகளின் தோட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அதற்கு மாற்று வழிகள் சிலவற்றை எடுத்துக் கூறியுள்ளார். ஆனால் இதில் விவசாயிகள் திருப்தி அடையாததால் பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை என முருங்கை சாகுபடியை அழித்துவிட்டு வேறு ஏதாவது சாகுபடி செய்யலாம் என்ற நிலைக்கு வந்துள்ளனர். அரசின் மூலம் வழங்கப்பட்ட முருங்கை நாற்றுக்களே இதுபோன்று இருப்பதால், தனியாரை எந்த விதத்தில் குற்றம் சொல்வது என விவசாயிகள் தங்களுக்கு தாங்களே நொந்து கொண்டனர்.

----

Next Story