ஒரு டன் முருங்கைக்காய் வரத்து


ஒரு டன் முருங்கைக்காய் வரத்து
x

ஒரு டன் முருங்கைக்காய் வரத்து

திருப்பூர்

வெள்ளகோவில்

வெள்ளகோவிலில் வாரச்சந்தையை யொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று 25 விவசாயிகள் 1 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.40 முதல் ரூ.45 வரைக்கும், மரம் முருங்கை ரூ.45 முதல் ரூ.50 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.50 முதல் ரூ.55 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரூ மைசூர், சட்டீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாகவும். மழையின் காரணமாக முருங்கைக்காய் வரத்து குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி மழையின் காரணமாக முருங்கை்காய்கள் கருத்து விட்டதால் விலை குறைந்து விட்டது. அடுத்த வாரத்தில் இருந்து வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத் தொடங்கிவிடும் என்று முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

----


Next Story