500 கிலோ முருங்கைக்காய் வரத்து


500 கிலோ முருங்கைக்காய் வரத்து
x

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நேற்று 500 கிலோ முருங்கைக்காய் வந்தது.

திருப்பூர்

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நேற்று 500 கிலோ முருங்கைக்காய் வந்தது.

500 கிலோ முருங்கைக்காய்

வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

நேற்று 30 விவசாயிகள் 500 கிலோ முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.55 முதல் ரூ.60 வரைக்கும், மரம் முருங்கை ரூ.60 முதல் ரூ.65 வரைக்கும், கரும்பு முருங்கை ரூ.70 வரைக்கும் கொள்முதல் செய்தனர்.

வடமாநிலத்தில் இருந்து வருகை

கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூரு, மைசூர், சத்தீஸ்கர், மும்பை, நாக்பூர், பூனே, கொல்கத்தா, ஜெய்பூர் ஆகிய பகுதியில் உள்ள ஓட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பிவைத்தனர்.கடந்த சில வாரங்களாக வட மாநிலத்தில் இருந்து முருங்கைக்காய் வரத்தொடங்கிவிட்டது. வெள்ளகோவில் வட்டார பகுதிகளில் வரத்து குறைந்து விட்டதாகவும், இப்பகுதியில் மழை இல்லாமல் இருந்தால் வரும் வாரங்களில் முருங்கைக்காய் வரத்து இருக்கும் என முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.


Related Tags :
Next Story