தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது - அமைச்சர் சாமிநாதன் பேச்சு


தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது - அமைச்சர் சாமிநாதன் பேச்சு
x

தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

கோவை,

கோவையில் நடைபெறும் உலக பொது இசை பறை மாநாட்டை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒளிபரப்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பறை அடித்து இன்று தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் 100-க்கு மேற்பட்ட இசைக்கருவிகள் கண்காட்சி, கலையக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிகழ்வின் சிறப்பம்சமாக 1330 பறை கலைஞர்கள் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் பறை இசைக்கும் திருக்குறள் பறை படை நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற உள்ளது.

நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

"தமிழினத்தின் அடையாளமாக பறை இசை கருவி உள்ளது. இதுபோன்ற பாரம்பரிய கலைகளை கற்று கொள்வதற்காக, அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் விரைவில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கான பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது" என்று கூறினார்.


Next Story