முருங்கைக்காய் விலை `கிடுகிடு' உயர்வு
உடன்குடியில் முருங்கைக்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது
தூத்துக்குடி
உடன்குடி:
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி வட்டார பகுதியில் 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் திரும்பிய திசைகளில் எல்லாம் தென்னை மற்றும் பனை மர விவசாயம் நடைபெறும். திடீரென இப்பகுதியில் உள்ள நிலத்தில் உவர்ப்பு நீர் நல்ல சுவையான குடிநீராக மாறியது. இதனால் விவசாயிகள் ஊடுபயிராக முருங்கை பயிரிட ஆரம்பித்தனர். முருங்கைகாய் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.10, ரூ.20-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் விலை கட்டுப்படியாகாமல் முருங்கை காயை ஆடு மாடுகளுக்கு உணவாக போட்டனர். தற்போது இதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. நேற்று ஒரு கிலோ ரூ.60 வரை கொள்முதல் செய்தனர். ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் முருங்கை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story