குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி


குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
x

புளியம்பட்டியில் குடிபோதையில் மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே புளியம்பட்டி புதுமை கிணறு தெருவைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் செல்வமணி (வயது 35). தொழிலாளி. இவரது மனைவி ரோசி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் செல்வமணியும், ரோசியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ரோசி நெல்லை மாவட்டம் வடக்கு கங்கைகொண்டானில் உள்ள தாத்தா சுப்பையா வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். செல்வமணி தனது வீட்டில் அம்மா அன்னம்மாள் உடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று செல்வமணி குடிபோதையில் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த புளியம்பட்டி போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று செல்வமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story