வீட்டில் மதுபோதையில் தவறி விழுந்த கொத்தனார் சாவு


வீட்டில் மதுபோதையில் தவறி விழுந்த கொத்தனார் சாவு
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 3:47 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறில் வீட்டில் மதுபோதையில் தவறி விழுந்த கொத்தனார் இறந்தார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

நெல்லை வண்ணார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). கொத்தனார் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கயத்தாறை சேர்ந்த முத்துமாரி (36). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கண்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல், மது குடித்து வந்தார். இதனால் சொந்த ஊரிலும், மனைவியின் ஊரிலும் அவ்வப்போது தங்கி வந்தார். இந்தநிலையில் சொந்த ஊரில் இருந்த அவர் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் கயத்தாறுக்கு வந்தார். பின்னர் நேற்று மதியம் வெகுநேரமாகியும் எழுந்திருக்கவில்லை.

இதனால் அவரை குடும்பத்தினர் எழுப்பியபோது, எழுந்திருக்காததால் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கண்ணன் இறந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டோணிதீலீப் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தினார். விசாரணையில், கண்ணன் மதுபோதையில் வீட்டில் தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.


Next Story