கூடலூரில் குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்-3 பேர் கைது


கூடலூரில்  குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்-3 பேர் கைது
x
தினத்தந்தி 21 Feb 2023 12:15 AM IST (Updated: 21 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் குடிபோதையில் வாலிபர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

நீலகிரி

கூடலூர்

கூடலூர் துப்புக்குட்டி பேட்டையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தின் அருகே 3 பேர் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். தொடர்ந்து அந்த வழியாக சென்றவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை காசிம்வயலை சேர்ந்தவர் பாபு மகன் ஷெரீப் (வயது 20) தட்டி கேட்டார்.

அப்போது ஆத்திரமடைந்த அந்த நபர்கள் ஷெரீப்பை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஷெரிப் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூடலூர் போலீசில் ஷெரீப் புகார் செய்தார். இதையொட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்னர் முத்தமிழ் நகரைச் சேர்ந்த நிஷாந்த் (23), சுரேஷ் (21), ஆனந்த் (வயது 21) ஆகிய 3 பேரை கைது செய்தார்.


Next Story