குழாயில் ஏற்பட்ட உடைப்பால்பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்


குழாயில் ஏற்பட்ட உடைப்பால்பெருக்கெடுத்து ஓடிய குடிநீர்
x

குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

ஈரோடு

ஈரோடு சென்னிமலை ரோடு காசிபாளையம் பகுதியில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது. இதனால் சாலையோரமாக மழைநீர் வடிகால் அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலமாக குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலையில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

இதனால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. தோண்டப்பட்ட குழியில் குடிநீர் குளம்போல் தேங்கி நின்றது. மேலும், போக்குவரத்து பணிமனை வளாகத்திலும் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story