குடிபோதையில் தகராறு செய்ததால் மீனவரை அரிவாளால்வெட்டிய தந்தை


குடிபோதையில் தகராறு செய்ததால் மீனவரை அரிவாளால்வெட்டிய தந்தை
x
தினத்தந்தி 8 Aug 2023 12:15 AM IST (Updated: 8 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் தகராறு செய்ததால் மீனவரை அரிவாளால் வெட்டிய தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

மணப்பாடு சாமியார்குடியேற்றை சேர்ந்தவர் இருதயம் (வயது 51). மீனவர். இவர் அடிக்கடி குடிபோதையில் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார். சம்பவத்தன்று குடிபோதையில் இருதயம் வீட்டுக்கு வந்துள்ளார். இதை அவரது தந்தை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட தகராறு முற்றியதில் செல்வராஜ் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இருதயத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ெசன்று விட்டாராம். படுகாயம் அடைந்த இருதயத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து இருதயம் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story