மதுவுக்கு அடிமையானதால் கடை உரிமையாளர் தற்கொலை
மதுவுக்கு அடிமையானதால் கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டாா்.
ஈரோடு
நம்பியூர்
நம்பியூர் கே.ஏ.கே. தோட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 51). பேன்சி கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி திவ்யா (37). ரமேஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மனைவி திவ்யாவிடம் ரமேஷ்குமார், மது பழக்கத்தை என்னால் விட முடியவில்லை. அதனால் எலி மருந்தை தின்றுவிட்டேன் என்று கூறியுள்ளார். உடனே திவ்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரமேஷ்குமாரை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரமேஷ்குமார் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story