தொழில் நஷ்டத்தால் ஜவுளி வியாபாரி தற்கொலை


தொழில் நஷ்டத்தால்  ஜவுளி வியாபாரி தற்கொலை
x

தேனி அருகே தொழில் நஷ்டத்தால் ஜவுளி வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்

தேனி

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி மகாத்மா காந்தி தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 54). ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால், பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவருடைய மனைவி வெண்ணிலா (47). இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். மூர்த்தி தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் பெட்டிக்கடையில் போதிய வருமானம் இன்றி மனஉளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story