தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது


தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
x

கமுதி அருகே தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ராமநாதபுரம்

கமுதி,

கமுதி அருகே தொடர் மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

தொடர் மழை

கமுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகள் நிரம்பி வழிகின்றன..இந்நிலையில் கமுதி அருகே காடமங்கலம் கிராமத்தில் நேற்று தொடர்ந்து 3 மணி நேரம் மழை பெய்தது.

இதனால் இப்பகுதியில் உள்ள பெரியஊருணி முழுவதும் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது.

மேலும் இந்த தண்ணீர் வெளியேற வழியில்லாமல், கிராமம் முழுவதும் எங்கு பார்த்தாலும் வெள்ள நீராக காட்சியளிக்கிறது. மழையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து முற்றிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்களில் ஊருணி தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் முழுமையாக சேதமடைந் துள்ளன.

வெளியேற்றும் பணி

இப்பகுதியைச் சேர்ந்த தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழிபோஸ் முன்னிலையில், மழை நீரை வெளியேற்றும் பணிகள், பொக்லைன் உதவியுடன் துரிதமாக நடைபெற்று வருகின்றன. கிராமத்தில் உள்ள சிறிய பாலம் மற்றும் ஓடைகளில் தண்ணீர் செல்ல முடியாமல் உள்ள பகுதிகளை பொக்லைன் மூலம், மழை நீரை வெளியேற்றினர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் காளி, துணைத்தலைவர் ருக்மணி, கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர் குருசாமி, கிராம பொதுமக்கள் பலர் இப்பணியில் ஈடுபட்டனர


Next Story