தொடர் மழையால் சாலையோர தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது


தொடர் மழையால்  சாலையோர தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது
x

தொடர் மழை

ஈரோடு

கரூர்- ஈரோடு மெயின் ரோட்டில் ஊஞ்சலூர் அருகே உள்ள கருவேலம்பாளையத்தில் இருந்து மொசுக்கரை செல்லும் சாலையில் ஆட்டுக்காரன் புதூர் உள்ளது. இங்கு தார் சாலையின் இடது புறத்தில் சுமார் 7 அடி உயரத்தில் 60 அடி நீளத்துக்கு தடுப்பு சுவர் கட்டப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை விட்டு விட்டு பெய்தது. இதன்காரணமாக சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் திடீரென சரிந்து விழுந்து விட்டது. இதனால் சாலையோரத்துக்கு யாரும் செல்லாத வகையில், கட்டை மற்றும் கற்கள் ஆகியவற்றை வைத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.


Next Story